அது வேற வாய்- விஜயை கேள்விகளால் வறுத்தெடுக்கும் சமூக வலைதளம்

மெர்சல் படத்துக்கு பின் விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். ரசிகர்களின் அதிக எதிர்ப்பார்புகளுக்கிடையே நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சர்கார் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போல ஸ்டில் வெளியிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு டாக்டர் அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான கூட்டமைப்பும், பசுமைத் தாயகம் அமைப்புடன் இணைந்து புகையிலைக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தினார். ஆவ்ரின் கோரிக்கையை ஏற்ற விஜய் இனி சினிமாவில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளீல் நடிக்க மாட்டேன் என்று கூறினார்.

இந்த நிலையில் தற்போது புகைப்பிடிப்பது போன்ற காட்சியில் நடித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. துப்பாக்கி படத்தில் கூட சுருட்டு புகைப்பது போன்ற படத்தை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.