இயக்குநர் வித்யாதரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் இட்லி. இப்படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. காமெடி த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன் , கோவை சரளா , மறைந்த நடிகை கல்பனா மற்றும் மனோபாலா , லொள்ளு சபா ஸ்வாமிநாதன் மற்றும் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வங்கியை கொள்ளையடிக்கும் மூன்று வயதான பெண்களை பற்றி கதையை கொண்டதாகும். காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் இந்த சமூகத்துக்கு தேவையான கருத்துகள் படத்தின் இறுதியில் வருவது போல் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இட்லி குடும்ப ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

இப்படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு 40 நாட்களில் நிறைவுபெற்றது. இப்படத்தின் படம் சென்னையில் படமாக்கப்பட்டது. பாடல் காட்சிகள் கேரளாவில் படமாக்கபட்டது. பாபு தூயயவன் மற்றும் G. கார்த்திக் அப்பு மூவீஸ் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.​