மலையாள நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார் மலையாள திரையுலகின் முன்னணி காமெடி நடிகர் இவர்.

பார்த்த உடனே சிரிப்பை வரவழைக்கும் அளவுக்கு பல படங்களில் காமெடி செய்து புகழ்பெற்றவர்.

கேரள அரசின் பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.

தமிழில் வடிவேலு நடித்து புகழ் பெற்ற ப்ரண்ட்ஸ் பட கதாபாத்திரத்தில் இவர்தான் மலையாளத்தில் நடித்திருந்தார்.

அதற்கு பின் வடிவேலு கொஞ்சம் தமிழ் ரசிகர்களுக்கேற்ப மாற்றி நடித்தார்.

ஓரிரு வருடத்துக்கு முன் நடந்த சாலை விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார்.

இயல்பு நிலையில் இல்லாத ஜகதி ஸ்ரீகுமார் நடிக்க முடியாமல் இருந்தார்.

கடும் உடல் நலிவுற்றிருக்கும் ஸ்ரீகுமார் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வருகிறாராம்.

காமெடி காட்சிகளை பார்க்கும்போது உடல் அசைகிறதாம் தன்னையறியமால் அசைந்து  ரசிக்கிறாராம்.