பிரபல நடிகரான ஜெய் சில மாதங்களுக்கு தனது காரில் விபத்தை ஏற்படுத்தினார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் நேற்று சென்னையில் தனது காரில் அதிக ஒலி எழுப்பியபடி வந்ததால் பலரும் எரிச்சல் அடைந்தனர்.

இதை கவனித்த போக்குவரத்து போலீசார் ஜெய்யின் காரை நிறுத்தி வினோத தண்டனையாக அதிக ஒலி எழுப்பினால் உண்டாகும் விளைவுகள் தவறுகள் பற்றி அவரை விட்டே பேச சொல்லி வீடியோ வெளியிட்டார்கள்.

இது போல் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பினார்கள். ஜெய் நடித்து காட்டும்போதே ஜெய்யின் முகமே தெரியாமல் மாட்டிக்கொண்டோமே என்ற ரீதியில் இருந்தது.