வெயில் போல ஜெயிலும் வெல்லுமா வசந்தபாலன் பட பர்ஸ்ட் லுக்

பிரபல இயக்குனர் வசந்தபாலன் இவர் ஆரம்பத்தில் இயக்கிய ஆல்பம் படம் பெரும் தோல்வியைடைந்தது. பின்னர் வெயில் படத்தை இயக்கினார் இது மாபெரும் வெற்றியைடைய வசந்தபாலனுக்கு தமிழ்சினிமாவில் ஒரு தனித்துவம் கிடைத்தது. அதை அடுத்து அவர் அரவான், அங்காடி தெரு காவியத்தலைவன் படங்களை இயக்க அதுவும் வெற்றியை தொட்டது.

இப்போது ஜி.வி பிரகாஷ்குமாரை வைத்து ஜெயில் படத்தை இயக்கி வருகிறார். இவரின் மற்ற படங்கள் போலவே இதுவும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜிவி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஜெயில் படம் வெயில் படம் போல வெற்றியடையும் என ரசிகர்கள் கருதுகின்றனர். ஏனென்றால் வசந்தபாலனின் வெயில் படத்தின் மூலம்தான் ஜி.வி இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பதும் இரண்டு படத்தின் பெயர்களும் ஒரே போல வருவதும் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளன.