ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் படங்களின் இரண்டாம் பாகம் வெளிவருவதும் இன்னும் சிறப்பாக வசூலை எட்டினால் நான்காம் பாகம் கூட திரையிடப்படுவது ஹாலிவுட் படங்களில் வழக்கம். இந்த டிரண்ட் நம்ம இந்திய திரைப்படங்களிலும் பார்க்க முடிகிறது. பெரும்பாலும் முதல் பாகத்தில் நடித்த ஹீரோக்களே பிற பாகங்களிலும் நடிப்பார்கள்.

ஆனால் ஒரு படம் பல திரையுலக மாற்றங்கள் உட்பட வேவ்வேறு ஹீரோக்கள் மாற்றங்களையும் சந்தித்து இன்றும் உலக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கபடுகிறது, இன்றும் அதன் ரிலீஸ் முக்கிய செய்தியா பேசப்படுகிறது என்றால் அது நம்ம ‘ஜேம்ஸ்பாண்ட்’ திரைப்படம்தான். இதுவரை 24 படங்கள் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் 25 ஆம் பாகம் நவம்பர் 8, 2019 இல் திரையிடப்படவுள்ளதாக படக்குழு டிவிட்டரில் பதிவு செய்துள்ளனர். இதன் 23 மற்றும் 24 ஆம் பாகமான ஸ்கைஃபால், ஸ்பெக்டரில் நடித்த கிரேக் இதிலும் ஹீரோவாக நடிக்கிறார்.