ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 24

விக்ரமின் ஸ்கெட்ச் படத்துடன் கனெக்சன் ஆனது அஜித்தின் ‘ஜனா’

12:16 மணி

சீயான் விக்ரம் நடித்து வரும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு 85% முடிந்துவிட்டதாகவும் வரும் ஜூன் மாதத்திற்குள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்றும், செப்டம்பரில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் இயக்குனர் விஜய்சந்தர் கூறியுள்ளார். இவர் ஏற்கனவே சிம்புவின் ‘வாலு’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரமுக்கு ஜோடியாக முதன்முறையாக தமன்னா நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் ஸ்ரீபிரியங்கா நடித்து வருகிறார். மேலும் ராதாரவி, சூரி, ஸ்ரீமான், ஆர்.கே.சுரேஷ், பாபுராஜ் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் அஜித் நடித்த ‘ஜனா’ படத்தில் நடித்த பாபுராஜ் என்ற கேரள நடிகர் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. ‘ஜனா’ படத்திற்கு பின்னர் 13 வருடங்கள் கழித்து இவர் நடிக்கும் தமிழ்ப்படம் ‘ஸ்கெட்ச்’ என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 9 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393