முன்னாள் முதல்வர் ஜெ அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு இரண்டு வருடங்களாகிறது.

கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22 இரவில் அவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழக கவர்னர் அமைச்சர் என யாருமே சரியாக பார்க்க முடியாதபடி சர்ச்சைகளுக்கு உள்ளாகி , லண்டன் மருத்துவர்கள் உட்பட பலர் வந்து பார்த்தும் சிகிச்சை பலனளிக்காமல் அதே ஆண்டு டிசம்பரில் இறந்தார்.

இதையும் படிங்க பாஸ்-  கருத்துக் கணிப்பு அல்ல; கருத்துத்திணிப்பு – எடப்பாடி ஆவேசம் !

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ அனுமதிக்கப்பட்டது முதல் மூத்த அமைச்சர்கள் உயர் அதிகாரிகள், கூட அவரது  வார்டுக்கு அனுமதிக்கப்படவில்லை. அவரது மருத்துவ அறிக்கை அவரை பார்க்க யாரும் அனுமதிக்காதது பொதுமக்களில் இருந்து அரசியல்வாதிகள் வரை இந்த மர்மங்களை பற்றி கேள்வி எழுப்பியதால், எடப்பாடி தலைமையிலான அரசு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதையும் படிங்க பாஸ்-  18 எம்எல்ஏக்களும் ராஜினாமா?: எடப்பாடியை வீழ்த்த தினகரன் எடுத்திருக்கும் ஆயுதம்!

இன்று வரை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் விசாரணை நடைபெற்று வந்தாலும், இரண்டு நாட்களுக்கு முன்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் ஜெ அனுமதிக்கப்பட்டபோது, அங்கு இருந்த  சிசி டிவி பதிவுகள் அழிந்துவிட்டது என திடீரென அறிவித்தது அதிர்ச்சியை கிளப்பியது.

ஜெ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் உள்நாட்டு குழப்பம் கொஞ்சமல்ல, போராட்டம், பிரச்சினை, அறிக்கை என ஜெ இருந்தபோது வாய் திறக்காத பலரும் அறிக்கை வெளியிடுவது, பேட்டியளிப்பது, அது சமூக வலைதளங்களில் வைரலாகி பிரச்சினைகள் எழும்புவதும் காவல்துறை நிறைய பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் திணறுவதும் அன்றாட வாடிக்கை நிகழ்வாகி விட்டது. அதனால்தான் இந்த அக்டோபர் 23 முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது.