தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் சார்பில் கட்டப்படும் புதிய கட்டிடத்திற்கு மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என நடிகர் சங்க செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதைத்தொடந்து முதலமைச்சர், அமைச்சர்கள் என அதிமுகவினர் அனைவரும் பேரணியாக சென்று மெரினா கடற்கரையில் உள்ள ஜெ.வின் சமாதியில் அஞ்சலி செலுத்தினர். அதேபோல், நடிகரும், நடிகர் சங்க செயலாளருமான விஷாலும் ஜெ.வின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “அம்மாவுக்கு மாற்றாக யாரும் வர முடியாது. அவர் ஒரு இரும்பு பெண்மணி. அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. நடிகர் சங்க கட்டிடத்துக்கு அவரின் பெயரை சூட்டுவது குறித்து சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறோம்” என தெரிவித்தார்.