இன்று மறைந்த முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக அலுவலகத்தில் அவரின் வெண்கல சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்த வெண்கல சிலை பற்றி மீம்ஸ கிரியேட்டர்கள் வலைத்தளங்களில் கலாய்த்து வருவது வைரலாகி வருகிறது.

ஜெயலலிதாவிற்கு 7 அடி உயரம் உள்ள வெண்கலச்சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்த சிலையானது ஹைதராபாத்தில் பிரசாத் என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் அதிமுகவின் நமது புரட்சி தலைவி அம்மா நாளிதழ் அதிகாரப்பூா்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிலையானது தற்போது நெட்டிசன்களின் விமா்சனத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சிலையானது காந்திமதி போல இருப்பதாக கிண்டல் செய்து வருகின்றனா். ஏனெனில் ஜெயலலிதாவின் முகத்தையே மாற்றி விட்டார்கள். அதுவும் இல்லாமல் சிலையில் ஜெயலலிதா என்று தயவு கூா்ந்து எழுதி வைக்கமாறு தெரிவித்துள்ளனா்.

ஜெயலலிதா சிலைய வைக்க சொன்னா இவங்க நிர்மலா பெரியசாமி சிலையை வைத்துள்ளார்கள் என்றும், சசிகலா போன்று உள்ளது என்றும், வளா்மதி போல இருக்கிறது என்றும், எடப்பாடி பழனிச்சாமி மனைவி போல உள்ளது என்று குறிப்பிட்டு மீம்ஸ் போட்டு வருகின்றனா்.

அந்த வெண்கல சிலையின் உருவம் யார் போல இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாத வகையில் இருக்கிறது என்று நெட்டி்சன்கள் குழப்பத்தில் ஒவ்வொறு முகத்தை மீம்ஸ் போட்டு ஒப்பிட்டு கலாய்ப்பது வைரலாகி வருகிறது.