தமிழகத்தில் தற்போது குட்கா ஊழல் மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. இந்நிலையில் குட்கா விவகாரத்தில் ஜெயலலிதா என்ன செய்திருப்பார் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

குடகா ஊழல் விவகாரத்தை சிபிஐ தற்போது கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் பெயர் அதிகமாக அடிபடுகிறது. அவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனையும் நடத்தி பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் குட்கா ஊழல் நடந்தது உண்மை தான் ஆனால் நான் நேர்மையானவன் என்ற விதத்தில் பேட்டியளித்து பரபரப்பை கூட்டினார். மேலும் இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரை பதவியில் இருந்து நீக்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றானர்.

இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், குட்கா ஊழல் தொடர்பான உண்மையை ஜெயலலிதாவிடம் அதிகாரிகள் மறைத்துவிட்டனர். இல்லையெனில் அப்போதே அவர்களை ஜெயலலிதா பதவி நீக்கம் செய்திருப்பார் என்றார்.