நடிகர் ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரைப்படமான ‘டிக் டிக் டிக்’ வரும் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தை அடுத்து அவர் சுந்தர் சி இயக்கவுள்ள பிரமாண்ட சரித்திர திரைப்படமான ‘சங்கமித்ரா’ படத்தின் படப்ப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது.

ஆனால் ‘சங்கமித்ரா’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம்தான் தொடங்கவுள்ளது என்பதால் அதற்குள் ஒரு படத்தில் நடித்துமுடிவித்துவிட ஜெயம் ரவி முடிவு செய்துள்ளார்.

இதன்படி அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கவுள்ள ஒரு காமெடி மற்றும் ரொமான்ஸ் படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கவுள்ளார். ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.