ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்த அறிவ்ப்பு

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிக் டிக் டிக்’ திரைப்படம் இம்மாதம் வெளியாகவுள்ள நிலையில் அவர் அடுத்ததாக ‘சங்கமித்ரா’ படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரலில் தொடங்கவுள்ள நிலையில் அதற்குமுன்னர் ஒரு குறுகிய கால படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் ஜெயம் ரவி

கார்த்திக் தங்கவேல் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷிகண்ணா ந்டிக்கவுள்ளார். சாம் சி.எஸ் இசையில், சத்யன் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படம் ஒரு ரொமான்ஸ் மற்றும் காமெடி படம் என்பது குறிப்பிடத்தக்கது.