இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 61’ படத்தில் பஞ்சாயத்து தலைவர், டாக்டர் மற்றும் மேஜிக்மேன் என மூன்று வேடங்களில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதில் மேஜிக்மேன் கேரக்டர் படத்தின் ஹைலைட் என்றும், படத்தின் கதைக்கு திருப்புமுனையான கேரக்டர் என்றும் படக்குழுவினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் இன்னொரு பிரபல நடிகரான ஜெயம் ரவியும் ‘டிக் டிக் டிக்’ படத்தில் மேஜிக்மேனாக நடித்துள்ளாராம். ‘மிருதன்’ சக்தி செளந்திரராஜன் இயக்கியுள்ள இந்த படத்தில் மேஜிக்மேனாக நடிக்கும் ஜெயம்ரவி, தனது மேஜிக்கை வில்லனுக்கு எதிராக பயன்படுத்துவதாகவும், இந்த காட்சிகள் தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத காட்சிகளாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

ஜெயம் ரவி, ஆரோன் அஜிஸ், நிவேதா, ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். நேமிசந்த் ஜெபக் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது.