ஜீவா, ஷாலினி பாண்டே நடிக்கும் கொரில்லா படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. மிகப்பெரிய பொருட்செலவில் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 3வது படம் கெரில்லா. இதில் ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

இதையும் படிங்க பாஸ்-  ஜி.வி.பிரகாஷின் '100% காதல்' படத்தின் சிங்கிள் டிராக் வெளியீடு!

ஜீவா நடிக்கும் கொரில்லா படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு பாண்டிசேரியில் இன்று பூஜையுடன் தொடங்கியது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைர்கடா் செய்கிறார் டான் சாண்டி.  விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு வெற்றி மகேந்திரன் மேற்கொள்கிறார்.

இதையும் படிங்க பாஸ்-  100% காதல் டீசர் -வீடியோ

முக்கியமான செய்தி என்னவென்றால், இந்த படத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்று நடிக்கிறது என்பது தான். இந்தியாவில் நடிகா் ஒருவருடன் காங் சிம்பன்சி குரங்கு நடிப்பது இது தான் முதல் முறை. இதனால் இப்படத்திற்கு இப்போதிலிருந்து எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

இதையும் படிங்க பாஸ்-  ரசிகா்களின் ஆதரவால் கலகலப்பு 3க்கு ரெடியாகும் சுந்தா்.சி!

பாண்டிசேரியில் பூஜையுடன் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் ஒரு மாதம் நடைபெறவிருக்கிறது. மேலும் இந்த படத்தின் அனைத்து பணிகளும் ஏப்ரல் மாதத்திற்குள் முடித்து விட வேண்டும் என படபப்பிடிப்பு தரப்பு திட்டமிட்டுடிருப்பதகாக கூறப்படுகிறது.

சம்மா் விடுமுறையில் ரசிகா்களுக்கு விருந்து படைக்கும் கொரில்லா என எதிர்ப்பார்க்கலாம்.