செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 26

ஒரே மாதத்தில் முடிவடையும் ஜீவா-நிக்கி கல்ராணி படம்

03:17 மணி

நடிகர் ஜீவாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக வெற்றி படங்கள் சிக்கவில்லை. நயன்தாராவுடன் ஜீவா நடித்திருந்த பெரிதும் எதிர்பார்த்த படமான ‘கவலை வேண்டாம்’ படத்தின் வசூலும் கவலை தரும்படியாகவே இருந்தது. இந்த நிலையில் அவருக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை அட்லி தயாரிப்பில் தயாராகி வரும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படம் மட்டுமே

இந்த நிலையில் ஜீவா, நிக்கி கல்ராணி நடிப்பில் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘கீ’. இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே மாதத்தில் முடிக்க திட்டமிட்ட படக்குழுவினர் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி படப்பிடிப்பை தொடங்கினர். திட்டமிட்டபடியே இம்மாதம் 20ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது.

ஜீவா, நிக்கி கல்ராணி, அணைகாசோடி, R.J. பாலாஜி , பத்ம சூர்யா , ராஜேந்திர பிரசாத் , சுஹாசினி , மனோ பாலா , மீரா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்டஹி செல்வராகவனின் உதவியாளர் காலீஸ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ளது.

(Visited 6 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393