விஜய்சேதுபதி சிபாரிசை நிராகரித்த ஜீவா, சசிக்குமார்

தமிழ் திரையுலகில் பிறர் பாணியை பின்பற்றாமல் தனக்கென ஒரு ஸ்டைலை பின்பற்றுபவர் விஜய்சேதுபதி. இவரது நடிப்பில் பண்ணையாரும்,பத்மினியும் மற்றும் சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் மூன்றாவதாக ஒரு கதையை தேர்வு செய்து விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளார். கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தாலும் கால்ஷீட் பிரச்னையால் ஜீவா அல்லது சசிக்குமாரிடம் கூறுமாறு சிபாரிசு செய்துள்ளார். அதன் படி இருவரிடமும் கதை கூறியுள்ளார் இயக்குனர். கதையை கேட்ட இருவரும் கதை நன்றாக உள்ளது.ஆனால் எனது ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்று கூறி மறுத்துள்ளனர்.

மீண்டும் விஜய் சேதுபதியிடமே வந்தார் அருண். கவலையை விடுங்க நனே இந்த கதையில் நடிக்கிறேன் என்று கூறினாராம். நல்ல கதையை தேர்வு செய்வற்கே தனி பக்குவம் வேண்டும். அது விஜய் சேதுபதியிடம் அதிகம் உண்டு என்பதே உண்மை.