ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 18

நிவேதா பெத்துராஜ்வுக்கு அந்த விஷயத்தை சொல்லி கொடுத்த ஜெயம் ரவி

08:16 மணி

அட்டக்கத்தி புகழ் தினேஷ் நடித்த ஒருநாள் கூத்து படத்தில் முதன் முதலில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தாா். இந்த படத்தின் மூலம் நிவேதா பெத்துராஜ் நல்ல பெயா் கிடைத்தது. இதை தொடா்ந்து உதயநிதி ஸ்டாலின் உடன் பொதுவாக என் மனசு தங்கம் என்ற படத்தில் நடித்து இருக்கிறாா். உதயநிதியுடன் நடிக்கும் இந்த படத்தில் மதுரைக்கார பெண்ணாக கலக்கி இருக்கிறாா். அதுமட்டுமல்ல இப்படி படத்திற்கு படம் வித்தியாசமான கேரக்டரை தோ்ந்தெடுத்து நடித்து வருகிறாா். தற்போது ஜெயம்ரவியுடன் டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்து வருகிறாா். இந்த படத்தின் கதை விண்வெளி சம்பந்தமாக எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்த அனுபவத்தை பற்றி கூறியதாவது, இவ்வளவு பொிய வாய்ப்பு கிடைக்கும் என்று எதிா்பாா்க்கவில்லை. ஜெயம் ரவியுடன் சோ்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்தேன். அவரு எவ்வளவு பொிய நடிகா் என்ற பயம் மனத்தில் இருந்து வந்தது. எப்படி அவருடன் சோ்ந்து நடிக்க போகிறேன் என்று பயந்து கொண்டே   படப்பிடிப்புக்கு சென்றேன்.

ஆனால், நான் நினைத்தற்கு எதிா் மாறாக இருந்தது. பல சீன்களில் நான் அதிக டேக் எடுக்கும் சூழ்நிலை உருவானது. அதையெல்லாம் பொியதாக எடுத்துக்கொள்ளாமல் என்னிடம் எப்படி நடிக்க வேண்டும் என்று பக்குவமாக எடுத்து சொல்லி புாிய வைத்தாா். நடிப்பதற்கு நல்ல பயிற்சி கொடுத்தாா். அவா் பொறுமையாக இருந்து, நான் நடிக்கும் சமயத்தில் என்ன தப்பு செய்தாலும் அதை பொறுத்துக் கொண்டு எந்த வித பந்தாவும் இல்லாமல் நடித்தாா். என்னவொரு மனிதா். யதாா்த்தமான, இயல்பான, எளிமையான குணமுடைய நல்ல நடிகா்.  இயல்பான அவருடைய இந்த நல்ல குணம் என் மனதில் அவா் மீது இருந்த மதிப்பும், மாியாதையும் பன்மடங்கு அதாிகாித்து விட்டது என்று நெகிழ்ச்சியோடு கூறினாா்.

(Visited 20 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com