விஜய்க்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவாரா ஜெயம் ரவி?

ஜெயம் ரவி நடித்து சமீபத்தில் வெளியான படம் வனமகன். சயீஷா நாயகியாக நடித்த அந்த படத்தை விஜய் தயாரித்து இயக்கினார். இந்த படத்தின் விழா ஒன்றில் ஜெயம்ரவி பேசும்போது, இந்த படம் ஒரு வேலை தோல்வி அடைந்தால் சம்பளம் வாங்காமல் விஜய்க்கு ஒரு படம் செய்து கொடுப்பேன் என்றார். படமும் வெளியானது. விமர்சனங்கள் நன்றாக இருந்தும் ஜி,எஸ்.டி பிரச்சனையால் வசூலில் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் விஜய்க்கு ஜெயம் ரவி உறுதி அளித்தபடி படம் ஒன்றை தருவாரா என்று கோலிவுட்டில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜெயம் ரவி விஜய்க்கு கை கொடுப்பாரா இல்லை ஜி.எஸ்.டி.யால் அடைந்த தோல்விக்கு நான் ஏன் பொறுப்பேற்க வேண்டும் என்று ஒதுங்கிக் கொள்வாரா என்ற கேள்விக்கு யார் விடை தருவது?