ஹாலிவுட்டில் பிரபல நடிகையான ஆசியா அர்ஜெண்டோ The Heart is Deceitful Above All Things என்ற படத்தில் ஜிம்மி பென்னட் என்ற சிறுவனுடன் நடித்தார். 2004-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஜிம்மி பென்னட் ஆசியா அர்ஜெண்டோவுக்கு மகனாக நடித்தார்.

இந்நிலையில் நான்கு வருடங்களுக்கு முன்னர், அதாவது ஜிம்மி பென்னட்டுக்கு 17 வயதாக இருக்கும் போது அவரை ஒரு ஹோட்டல் அறைக்கு வரவழைத்துள்ளார் அர்ஜெண்டோ. அப்போது ஜிம்மி பென்னட்டுக்கு தான் எழுதிய காதல் கடிதங்களை காட்டி அவரை கட்டாயப்படுத்தி அவருடன் உடலுறவு கொண்டுள்ளார் ஆசியா அர்ஜெண்டோ.

இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட ஜிம்மி பென்னட்டால் சினிமா துறையில் முழுமனதாக ஈடுபட முடியவில்லை. இதனால் தற்போது, அந்த சம்பவம் நடந்து நான்கு வருடங்கள் கழித்து அர்ஜெண்டோ தனக்கு 3.5 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என ஜிம்மி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் தன்னால் 3.5 மில்லியன் டாலர் வழங்க முடியாது எனக்கூறி 380000 டாலர் கொடுத்து இந்த வழக்கை நீதிமன்றத்திலேயே சுமூகமாக முடித்துள்ளார் அர்ஜெண்டோ. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 2.5 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

ஹாலிவுட் தயாரிப்பாளர் வெயின்ஸ்டின் மீது பாலியல் புகார்களை கூறிய அர்ஜெண்டோவே தற்போது பாலியல் புகாரி சிக்கியுள்ளது ஹாலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது.