Connect with us

செய்திகள்

ஜோப்ரா ஆர்ச்சர் அதகளம் ! – ஆஸி 225 ரன்களுக்கு ஆல் அவுட்

Published

on

ஆஷஸ் தொடரின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 225 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 69 ரன்கள் பின் தங்கியுள்ளது.

ஆஷஸ் தொடர் இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. அதனால் கடைசிப் போட்டியில் எப்படியும் வெற்றிப் பெற்று தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து உள்ளது.

இந்நிலையில் நேற்று முன் தினம் தொடங்கிய போட்டியில் இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழக்க ரோரி பர்ன்ஸ் 47 ரன்களும் ஜோ ரூட் 54 ரன்களும் சேர்த்து ஓரளவு கௌரவமான ஸ்கோரை எட்டியது இங்கிலாந்து. இதையடுத்து பின் வரிசையில் இறங்கிய ஜோஸ் பட்லர் அதிரடியாகா ஆடி 64 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதனால் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்களை சேர்த்துள்ளது. இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியின் பட்லர் அதிகபட்சமாக 70 ரன்கள் சேர்த்தார்.

அதையடுத்து ஆடிய ஆஸி அணியில் தொடக்க வீரர்கள் இருவரும் ஒற்றை இலக்க எண்ணில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.  வழக்கம்போல ஸ்டீவ் ஸ்மித் நங்கூரம் பாய்ச்சி நிற்க அவருக்கு ஓரளவுக்கு லபூப்ஷக்னே உதவி புரிந்தார். அவர் 48 ரன்களில் அவுட் ஆன பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் அணிவகுப்பு நடத்தினர். ஸ்டீவ் ஸ்மித் அரைசதத்தைக் கடந்து 80 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் ஆஸி அணி 225 ரன்களுகு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் அபாரமாக வீசி 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

vijay
செய்திகள்15 mins ago

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்… வைரல் வீடியோ

அரசியல்2 hours ago

பிரதமருக்குப் பொருளாதாரம் புரியாது – சுப்ரமண்ய சுவாமி தடாலடி !

செய்திகள்2 hours ago

மணமக்களுக்கு வெங்காய பொக்கே – நண்பர்கள் அளித்த பரிசு !

செய்திகள்3 hours ago

கணவன் எரிவதை வீடியோ காலில் பார்த்த பெண் – நெஞ்சை உலுக்கும் சோகம் !

செய்திகள்3 hours ago

கற்பழிப்பு நாடகம் ஆடிய பெண் – கொலைகார காதலனுக்காக !

அரசியல்4 hours ago

நமது கட்சியினர் சிலர் எடப்பாடியோடு தொடர்பில் உள்ளனர் – ஸ்டாலின் அதிருப்தி !

செய்திகள்4 hours ago

இப்படி செய்தால் எப்படி வெற்றி பெற முடியும் ? – தோல்விக்குப் பின் கோஹ்லி கருத்து !

ஜோதிடம்4 hours ago

இன்றைய ராசிபலன்கள் 09.12.2019

bigil
செய்திகள்3 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்3 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்3 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்2 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்4 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்2 weeks ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending