கொலை மிரட்டல் புகார் ; வாபஸ் வாங்கிய நடிகை ஜோதிமீனா

தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த புகாரை நடிகை ஜோதிமீனா வாபஸ் பெற்றுள்ளார்.

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக தோன்றி நடனமாடி பிரபலமானவர் நடிகர் ஜோதிமீனா. அவருக்கு பின் சினிமாவிற்கு வந்த அவரின் மகள் ஜோதிமீனா பல படங்களில் நடித்தார்.

ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் இல்லாததால் திருமணம் ஆகி, சென்னை தி.நகரில் கணவர் மற்றும் குழந்தையுடன் செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில், நேற்று இரவு பாண்டிபஜார் காவல் நிலையத்தில் அவர் ஒரு புகார் அளித்தால். அதில், நள்ளிரவில் தனது வீட்டிற்குள் புகுந்த 3 பேர் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

போலிசாரின் விசாரணையில் அந்த 3 பேரும் ஜோதிமீனாவின் நண்பர்கள் என்பதும், மற்றொரு பிரச்சனையில் அவர்கள் ஜோதிமீனாவை மிரட்டியது தெரியவந்தது. அதன் பின் அவர்களிடம் ஏற்பட்ட சமரசம் காரணமாக, போலீசாரிடம் அளித்த புகாரை ஜோதிமீனா வாபஸ் பெற்றார்.