மகளிர் மட்டும் ஆடியோ விழாவில் அஜித், விஜய்யை மறைமுகமாக தாக்கிய ஜோதிகா

கோலிவுட்டில் தற்போது தயாரிக்கப்படும் படங்களில் குறைந்தது இரண்டு ஹீரோயின்கள் இருப்பது வாடிக்கையாக இருக்கின்றது. அதிலும் ரஜினி, கமல், அஜித், விஜய் படங்கள் என்றால் இரண்டுக்கு மேல் ஹீரோயின்கள் உள்ளனர். தற்போது தயாரிக்கப்பட்டு வரும் ‘விவேகம்’ படத்தில் இரண்டு ஹீரோயின்களும், ‘தளபதி 61’ படத்தில் மூன்று ஹீரோயின்களும் உள்ளனர். இதை நடிகை ஜோதிகா மறைமுகமாக தாக்கியுள்ளார்.

இதுகுறித்து இன்று ‘மகளிர் மட்டும்’ ஆடியோ விழாவில் பேசிய நடிகை ஜோதிகா, ‘எதற்காக ஒரு ஹீரோவுக்கு ரெண்டு, மூணு, நாலு ஹீரோயின்கள்? ஒரு படத்துக்கு ஒரு ஹீரோ என்றால் அவருக்கு ஜோடியாக ஒரு ஹீரோயின் போதும். இப்படி ஒரு ஹீரோவுக்கு நான்கு ஹீரோயின்கள் வைத்தால் அந்த படத்தை பார்க்கும் இளைஞர்களுக்கும் நான்கு கேர்ள் பிரண்டு வைக்க வேண்டும் என்ற ஆசை வரும்

எனவே திரைப்படங்களை இயக்குபவர்கள் சமூக பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும், ஹீரோயின்களுக்கு ஆபாச வசனங்கள், ஐ லவ் யூ வசனங்களை கொடுக்காமல் அறிவாளியான கேரக்டர்களை கொடுக்க வேண்டும் என்று ஜோதிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.