திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் இடம் ஒதுக்க நீதிமன்றத்தை நாடியுள்ளது திமுக. இதில் காரசாரமான வாதங்கள் நடந்து வருகிறது.

திமுக தலைவர் கருணாநிதி மீது ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளது, அதனால் சட்ட சிக்கல் காரணமாக அவருக்கு மெரினாவில், அண்ணா சமாதி அருகில் இடம் ஒதுக்க முடியாது என அரசு கைவிரித்தது. இதனையடுத்து திமுக தரப்பு இதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றது.

இந்த சூழலில் காருணாநிதி மீதுள்ள ஐந்து வழக்குகளையும் மனுதாரர்கள் வாபஸ் பெற்று கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைக்க கோரிக்கை வைத்தனர். இந்த சூழலில் அரசு தரப்பு தொடர்ந்து கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடையாது என முரண்டு பிடித்து வருகிறது.

இந்நிலையில் இதனை விசாரித்து வரும் நீதிபதிகள், வழக்குகள் நிலுவையில் உள்ளது சட்ட சிக்கல் உள்ளது என கூறினீர்கள், இப்பொழுது வழக்குகள் வாபஸ் வாங்கப்பட்டு உள்ளது. ஆனால் சட்ட சிக்கல் இருப்பதாக கூறிவிட்டு தற்போது முரணாக வாதிடுகிறீர்களே என செக் வைத்தனர் நீதிபதிகள்.

மெரினாவில் இடம் மறக்கப்பட்டதற்கான காரணத்தை விட்டுவிட்டு வேறு காரணங்களை அரசு தரப்பு கூறி வருவதால், நீதிபதி சுந்தர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.