ராய் லட்சுமி படத்துக்கு ஏ சான்றிதழ்

தென்னிந்திய நடிகைகள் அனைவருக்குமே பாலிவுட் மோகம் நிச்சயம் உண்டு. காரணம் சம்பளம் ஒருபுறம் இருந்தாலும் உலகம் முழுவதும் பிரபலமாக வாய்ப்பாக அமையும். இதனால் அனைத்து நடிகைகளுகே பாலிவுட்டில் நடிக்க விரும்புகின்றனர். தமன்னா,இலியானா,ஸ்ரேயா வரிசையில் தற்போது ராய் லட்சுமியும் இணைந்தார்.

ராய் லட்சுமி நடித்த முதல் பாலிவுட் படமான ஜூலி2 படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில் உச்சகட்ட கவர்ச்சியில் ராய் லட்சுமி நடித்திருப்பது தெரிகிறது. மிகவும் பரபப்பாக பார்க்கப்பட்ட இப்படத்தினை சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் படத்தின் எந்த ஒரு காட்சியும் கட் செய்யப்படவில்லை.