பிக்பாஸ் வீட்டில் ஜூலி-ஆர்த்தி. இனிமேல் என்ன ஆகும்?

சற்று முன் வெளியாகிய விஜய் டிவியின் புரமோ வீடியோ மூலம் பிக்பாஸ் வீட்டில் ஜூலி மற்றும் ஆர்த்தி நுழைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிரித்த முகத்துடன் ஜூலியும், ஆர்த்தியும் நுழைந்தாலும் பழைய பங்கேற்பாளர்கள் மீண்டும் நுழைவதை ஏற்கனவே இருப்பவர்கள் விரும்பவில்லை என்றே தோன்றுகிறது.

முகத்தில் சிரிப்பை வரவழைத்து கொண்டு இருவரையும் மற்ற பங்கேற்பாளர்கள் வரவேற்றாலும் அவர்கள் மனதின் நெருடன் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அதே நேரத்தில் ஜூலி, ஆர்த்தி வருகை பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகளை அதிகரிக்கவே செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே ஓவியா போல் நாடகமாடும் சுஜா, காயத்ரிக்கு மாற்றாக இருக்கும் காஜல் ஆகியோர்களுடன் ஜூலியும் இணைவதால் வீட்டில் பிரச்சனைகளுக்கு பஞ்சமிருக்காது என்றே கருதப்படுகிறது.