ஹீரோயின் ஆகிறார் ஜூலி

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமானவர் ஜூலி. மக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் அவருக்கு மிகபெரிய செல்வாக்கு ஏற்பட்டது. யாருடா இந்த பொண்ணு என்று எல்லோரும் கேள்வி எழுப்பினர். பின்னர் அவரை பற்றிய எந்த செய்திகளும் இல்லை. இந்த நிலையில் திடீரென விஜய் டீவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் நற்பெயருடன் இருந்த அவர் ஓவியாவுடன் ஏற்பட்ட மோதலால் பெயரை கெடுத்துக் கொண்டார். சமூக வலைதளங்களில் அவரை திட்டாதவர்களே கிடையாது. இவ்வளவு ஏன் அவருடைய தம்பியே, எனது அக்காவை பார்க்க அறுவருப்பாக உள்ளது என்று கூறியதாக செய்திகள் வந்தன. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வெளியே வந்து மக்கள் எதிப்புகளை எப்படி எதிர்கொள்ள போகிறார் என்று நினைத்திருந்த வேலையில் தற்போது அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது என்றே கூறலாம்.

பல படங்களில் சிறிய காமெடி வேடங்களில் நடித்த கூல் சுரேஷ் தற்போது ஜூலியை ஹீரோயினாக வைத்து ஒரு படம் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அந்த படத்தில் கதா நயகனும் அறிமுகமே. ஜூலி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு இந்த படம் துவங்கும் என அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
சினிமாவிலும் ஓவியாவிற்கு போட்டியாக வருவாரோ ஜூலி?

&