விஜய் டீவியில் மீண்டும் ஜூலி- கழுவி ஊற்றும் நெட்டீசன்கள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்களுக்கு அறிமுகம் ஆனவர் ஜூலி. சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டவர் அவர். இடையில் காணாமல் போன அவர் திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றினார். இந்த நிகழ்ச்சி யாருக்கு எந்த பாதிப்பை ஏற்படுத்தியதோ இல்லையோ ஜூலிக்கு எதிர்மறையாகவே மாறியது. இவரது டோட்டல் இமேஜையும் காலி செய்தது அந்த நிகழ்ச்சி.

இந்த நிலையில் தற்போது விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் கிங்ஸ் ஆப் காமெடி நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். அதில் அவர் பேசும்போது, வந்துட்டேன் சொல்லு…திரும்ப வந்துட்டேனு சொல்லு என்ற கபாலி வசனத்தை பேசினார்.இவரது இந்த பேச்சின் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ஓவியா ரசிகர்கள் ஜூலியை கழுவி ஊற்றி வருகின்றனர்.