திரையுலகில் ஓவியாவிற்கு கிடைத்த ரசிகர்களை விட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அவர் அதிக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் . அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினாலும் இந்நிகழ்ச்சியின் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களை விட அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட ஒரே போட்டியாளர் ஓவியா. அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களால் வெறுக்கப்பட்டவர் ஜூலி.

           இவர் ஓவியாவிற்கு மட்டுமின்றி தன்னுடன் இருந்த சக போட்டியாளர்கள் பலருக்கும் உண்மையாக இல்லாமல் பொய்யின் மறு உருவமாக இருந்ததால் பலர் இவரை வெறுத்தனர். இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு நடனமாடிய ஜூலி, ஒரு சில வார்த்தைகள் பேசும்படி அழைக்கப்பட்டார்.

         ஆனால் ஜூலி பேச ஆரம்பித்தவுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா ரசிகர்கள் ஜூலியை ஒரு வார்த்தை கூட பேச விடாமல் தொடர்ந்து ‘ஓவியா ஓவியா’ என சத்தம் எழுப்பி கொண்டே இருந்தனர் அதனால் அவரால் பேச முடியவில்லை. நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ஓவியா ரசிகர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டு கொண்ட பிறகும் ஓவியா ரசிகர்கள் தொடர்ந்து சத்தம் எழுப்பியதால் வேறு வழியின்றி ஓவியாவை நிகழ்ச்சி தொகுப்பளார்கள் அனுப்பிவைத்தனர். இதனால் பெரும் அவமானத்துடன் ஒரு சில வார்த்தைகள் கூட மேடையில் பேச முடியாமல் ஜூலி வெளியேறினார்.