கலா மாஸ்டர் நிகழ்ச்சியின் தொகுப்பாளினி ஜூலியா?

      பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பலரின் கோபத்திற்கு ஆளானவர் ஜுலி. வீர தமிழச்சி என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பாராட்டப்பட்ட இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் வெறுப்பை சம்பாதித்துவிட்டார்.ஆனால் ஜூலியின் தன்னம்பிக்கையை அனைவரும் பாரட்டி தான் ஆக வேண்டும். எது எப்படி இருந்தாலும் ஜூலிக்கு கிடைக்க வேண்டியது கிடைத்து கொண்டு தான் இருக்கிறது.

      இவர் அடுத்த என்ன செய்ய போகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் ஜுலி கலைஞர் தொலைக்காட்சியில் ஓடி விளையாடு பாப்பா சீசன் ஆறு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமிட்டாகியுள்ளார்.திங்கள் முதல் வெள்ளி வரை அவரது ஷோ ஒளிபரப்பாக இருக்கிறதாம். ஜுலி தொகுத்து வழங்க இருக்கும் அந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கலா மாஸ்டர் மற்றும் நடிகர் கோகுல் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.