பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக ஆர்த்தி, ஜூலி ஆகிய இருவரும் சென்றனர். இருவரும் ஒரு வாரம் மட்டும் தங்குவார்கள் என பிக்பாஸ் கூறுகிறார். ஆனால் உள்ளே வந்ததும் ஜூலி நான் இன்று ஒரு நாள் மட்டும்தான் தங்க உள்ளேன் என்று கூறி தனது பொய் முகத்தை காட்டுகிறார். இதுவே ரசிகர்களுக்கு மீண்டும் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்  மீண்டும் நேற்று பொய் மூட்டைகளை அவிழ்த்து விட ஆரம்பித்தார். பிக் பாஸில் இருந்து வெளியேறி வெளியே சென்ற பிறகு ரசிகர்கள் நிறைய கிப்ட் கொடுத்தார்கள், கமல் கூட கொடுத்தார் ஆனால் ரசிகர்கள் தான் அதிகம் கொடுத்தார்கள் என ஜூலி சொன்னார். ஆனால் ஜூலி கூறுவது பொய் என்பதை உடனிருப்பவர்கள் கண்டுபிடித்தனர்.

எவ்வளவுதான் பட்டாலும் ஜூலி இன்னும் திருந்தவே இல்லை என்று சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர்.