தன்னை மாற்றிக் கொள்வாரா ஜூலி?

தமிழக மக்களை கட்டிபோட்டுள்ள நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸாகத்தான் இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது பேதமின்றி இரவு 9 மணிக்கு டீவி முன் ஆஜராகிவிடுகின்றனர்.

இந்த நிகழ்ச்சி ஒரு நாடகம்தான் என்று ஒரு தரப்ப்பினர் கூறினாலும் நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துகொண்டேதான் உள்ள்னர் என்பதை நிருபிக்கிறது டி.ஆர்.பி.

இந்த நிகழ்ச்சியில் உண்மையிலேயே அதிகம் பெயரை கெடுத்துக் கொண்டவர்கள் பட்டியலில் ஜூலி முதலிடம் வகிக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கிடைத்த பெயரை பிக்பாஸில் இழந்து நிற்கிறார். காரணம் ஓவியா மீது அவர் சுமத்திய வீண் பழி.

இந்த சம்பவங்களுக்கு பிறகும் ஜூலி திருந்தாமல் இருப்பதுதான் வேதனை. ஓவியா ஜூலியிடம் பேச முயல்வதும், அதனை தவிர்த்து ஜூலி அங்கிருந்து வெளியேறுவதும் ஜூலியின் பக்குவமின்மையையே காட்டுகிறது. இனி வரும் காலங்களில் ஜூலியின் நடவடிக்கைகளை பொறுத்தே மக்களின் மன நிலை மாற வாய்ப்புள்ளது.

தன்னை மாற்றிக் கொள்வாரா ஜூலி?