ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி மூல மக்களிடம் பிரபலம் ஆனவர் ஜூலி. அந்த சமயம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டமே இருந்தது. அந்த அளவிற்கு இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டது. இது எல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளும் வரையில்தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூலியின் இமேஜை டேமேஜ் பண்ணியது உண்மைதான். அந்த நிகழ்ச்சியில் ஓவியாவிடம் இவர் நடந்துகொண்ட விதம் மக்களிடையே ஜூலி மீதான நன்மதிப்பை கெடுத்தது. இருந்தாலும் அதனை பெரிதும் கண்டுகொள்ளாத ஜூலி தற்போது சினிமா, சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவருகிறார். ஆனாலும்ரசிகர்களும் அவரை கிண்டல் செய்து விமர்சனக்களை கொடுத்துதான் வருகின்றனர்.

இந்த நிலையில் ஜூலி காளி வேடம் போட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது அவர் நடிக்கும் படத்திற்கான ஸ்டில் என்பது தெரிகிறது. ஆனால் என்ன படம் என்ற விபரம் தெரியவில்லை. இந்த படத்தை பகிர்ந்துவரும் ரசிகர்கள் இதென்னடா காளிக்கு வந்த சோதனை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.