bigg boss julie

பிக்பாஸ் ஜூலியை யாரும் மறந்திருக்க முடியாது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அறியப்பட்டவர் ஜூலியானா. அதன் பின் பிக்பாஸில் கலந்து கொண்டு அவருக்கு இருந்த இமேஜை கெடுத்துக்கொண்டது தான் மிச்சம். ஜல்லிக்கட்டிற்கு போராடிய வீரதமிழச்சி என்று அனைவராலும் பாராட்டப்பட்ட ஜூலி பிக்பாஸ் வீட்டில் அந்த பெயரை மாற்றி விட்டார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்து கொண்டதன் வாயிலாக அவருக்கு நிறைய பட வாய்ப்புகளும், விளம்பர படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது ஜூலி காட்டில் தான் அடைமழை பெய்கிறது.

julie

தன்னுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி கொண்டிருக்கும் ஜூலி தான் நல்ல பிக்கப். தற்போது ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜூலி. கப்பலில் சென்றபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ப்ரொஃபைல் பிக்சராக வைத்துள்ளதை பார்த்த நெட்டிசன்கள் ஜூலி மிகவும் வாழ்க்கையை என்ஜாய் பண்ணுகிறார் என்று கலாய்த்து வருகிறார்கள். கலாய்ப்பவர்கள் கலாய்த்தாலும், பாராட்டுபவர்களும் இருக்கதான் செய்கிறார்கள்.

ஏற்கனவே அவர் பி.எம்.டபுள்யூ கார் ஓட்டியபடி எடுத்து கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். அதையும் வைத்து செய்தார்கள் நெட்டிசன்கள். அந்தமானுக்கு ஹாலிடேவுக்கு சென்றபோது எடுத்துக்கொண்ட ஸ்கூபா டைவிங் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டார் ஜூலி.

juile

இதெல்லாம் பார்க்கும் போது நமக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் என்ற எண்ணம் வருகிறது அல்லவா? என்று நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள். கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஜல்லிக்கட்டு ஜூலிக்கு தான் யோக்கம் அடித்துள்ளது.