ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அரசுக்கு எதிராக கோஷங்களை முழங்கி அனைவரது பார்வையும் தன் பக்கம் விழும்படி செய்தவா் ஜூலி. சின்னம்மா சின்னம்மா ஒபிஎஸ் எங்கம்மா, ஒடச்ச கடலை ஒடச்ச கடலை  ஒரு உள்ளிட்ட அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை முழங்கி ஒட்டு மொத்த இந்தியாவையே தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த ஜூலியை வீரத்தமிழச்சி என்று இணையதளத்தில் டிரெண்டிங்காக ஆகும் வகையில் பெயர் பெற்றார்.

ஜல்லிக்கட்டு மூலம் பிரபலமான ஜூலி தனது அடுத்த பயணத்தை தொடங்க ஆரம்பித்தார். தனது அடுத்த அடியை பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தொடங்கினார். படிப்படியாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும், வெள்ளி திரையில் சின்ன சின்ன கேர்கடரில் நடிக்க தொடங்கி தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேர்கடரில் நடிக்கும் அளவுக்கு முன்னேறி விட்டார்.

ஜூலி எப்போதும் சமுதாயத்தின் மீது பெரிய அக்கறை இருப்பவராக காட்டி கொள்ளுபவராக வலம் வருவார். அண்மையில் அப்படி அக்கறை காட்டி உள்ள ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜூலி அந்த வீடியோவில் கூறியதாவது, எக்கசக்க அரசியல் மாற்றங்கள் தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. நீட் தோ்வு, காவிரி மேலாண்மை வாரியம், போன்ற பல பிரச்சனைகள் இருக்கிறது. இந்த நிலையில் தான் இந்த மண்ணின் மீது பொறுப்பு இப்போது தான் எனக்கு அதிகமாக இருக்கிறது. என்னோட மக்களுக்காக நான் என்ன பண்ண போகிறேன், தொடர போகிறேன் என கடைசியில் ஏதோ சத்தமின்றி முனு முனுக்கிறார்.

அவர் பேசியது என்னவென்று பார்த்தால், இறுதியில் சத்தமில்லாமல் அவா் முனுமுனுத்தது என்னனா, உங்க ஆட்சி என்ன கொடுத்துச்சி..? என்பது தெரிகிறது. இப்படி அரசியல் குறித்து பேசி இருப்பதை பார்த்தால் கட்சியில் களப் பணியாற்ற இருக்கிறாராரோ..? என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது