பிக்பாஸ் நிகழ்ச்சியில் தப்பிய ஜூலி; வெளியேற்றப்பட்ட ஆர்த்தி

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து  நடிகை ஆர்த்தி  வெளியேற்றப்பட்டார்.

விஜய் டீவியில் தற்போது பரபரப்பாக நடைபெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியிலிருந்து நடிகை அனன்யா, நடிகர் ஸ்ரீ, கஞ்சா கருப்பு, பரணி ஆகியோர் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில் அடுத்து யார் வெளியேறப்போகிறார் என்பதை, அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசன் இன்று அறிவித்தார்.

இன்று வெளியேற்றப்படுபவர்கள் லிஸ்டில் நடிகை ஆர்த்தி, ஜூலி, வையாபுரி, ஒவியா ஆகியோர் இருப்பதாகவும், ஓவியாவிற்கு அதிக வாக்குகள் அளித்து மக்கள் அவரை காப்பாற்றிவிட்டனர் என்றும் கமல்ஹாசன் நேற்று தெரிவித்தார். எனவே, இன்றைய நிகழ்ச்சியில் அடுத்து யார் வெளியேறப்போகிறார்கள் என்ற பரபரப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று வெளியேற்றப்படுவர் பெயரை கமல் அறிவித்தார். அதில் ஆர்த்தி வெளியேற்றப்பட்டார். ஜூலி மற்றும் வையாபுரி ஆகியோர் தப்பினர்.