பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலிக்கு தற்போது வருத்தமே மிஞ்சியிருக்கும். காரணம் அவரது நடவடிக்கைகளால் மக்கள் அடைந்த அதிருப்திதான். நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டபோது சூழ்நிலையை உணர்ந்த கமல்ஹாசன், என் தங்கையை வெளியே அனுப்புகிறேன் என்று கூறினார். அந்த அளவிற்கு மக்கள் அவர் மீது கோபத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வாரம் மட்டும் தங்கும் விருந்தினராக ஜூலியும், ஆர்த்தியும் வந்துள்ளனர். அப்போது  பிந்து மாதவியிடம் பேசும் ஜூலி, நான் என்ன சொன்னாலும் கேட்கும் மனநிலையில் மக்கள் இல்லை.  என் மீதான விமர்சனக்களை கேட்ட என் பெற்றோர் ரொம்ப வருத்தப்பட்டாங்க, ஆனா என்ன பாத்ததும் சரி ஆகிட்டாங்க. என்னை தீவிரவாதிய விட மோசமா நடத்துனாங்க. நீ செத்திருப்பனு நெனச்சோம், நீ இன்னும் சாகலியா? னு கேட்டாங்க என்றார்.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு நான் திரும்ப வந்தபோது,  என்னை பார்த்து  பொதுமக்கள் நீ பொய்க்காரி என்று கூச்சலிட்டனர் என்று வேதனையுடன் கூறினார்.