காவ்யா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக சரவணன் பழனியப்பன் தயாரித்துள்ள படம் ஜுலை காற்றில். கேசி சுந்தரம் இப்படத்தை இயக்கியுள்ளார். . இந்த படத்தில் ஆனந்த் நாக், அஞ்சு குரியன் சம்யுக்தா மேனன், சதீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மல் சேவியர் எட்வெர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ஜுலை காற்றில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இயக்குனர் கேஎஸ் ரவிகுமார், நடிகர் கார்த்தி உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர். இந்த விழாவில் நடிகர் கார்த்தி ‘கண்களின் ஓரமாய் என்ற பாடலை வீடியோவை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து ஜுலை காற்றில் படத்தின் டிரெய்லரும் வெளியானது.