junga

விஜய் சேதுபதி,சாயிஷா மற்றும் மடோனா நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஜூங்கா. கோகுல் இயக்கியுள்ள இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்கில் பலத்த சிரிப்பலைகளாக உள்ளதாக ரசிகர்கள் பலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஜூங்கா படத்தின் முதல்நாள் வசூல் விபரம் தற்போது தெரியவந்துள்ளது. ரிலீஸான முதல் நாளில் மட்டும் ரூ. 7.6 கோடி வசூல் செய்துள்ளதாம். அதிலும் சென்னையில் மட்டும் ரூ. 1.9 கோடி வசூலித்துள்ளது என்று கூறப்படுகிறது.