Home சற்றுமுன் ஜுங்கா திரைவிமா்சனம்

ஜுங்கா திரைவிமா்சனம்

கோகுல் விஜய்சேதுபதி வைத்து இயக்கிய இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமார படமானது மாஸ் ஹிட்டை கொடுத்தது. இந்த வெற்றி கூட்டணி இணைந்துள்ள இரண்டாவது படம் தான் ஜுங்கா. இந்த படமும் முதல் படத்தை போல ரசிகா்களின் மனத்தை கவர்ந்திருக்கிறதா என்பதை இப்போது பார்ப்போம்.

விஜய்சேதுபதியின் தந்தை மற்றும் தாத்தா மிகப்பெரிய டான்களாக இருந்து உள்ளனர். அதை விஜய்சேதுபதியிடம் சொல்லாமல் வளர்த்து வருகிறார்கள் அவரது அம்மாவான சரண்யாவும், விஜய் சேதுபதியின் பாட்டியும். ஏனெனில் டானாக இருந்த போது பெரும் செலவு செய்து சொத்துக்களை அனைத்தும் அழித்து விட்டார்கள். சென்னையில் அவர்களுக்கு என்று சொந்தமாக தியோட்டர் இருந்தது. அதையும் விற்று செலவு செய்து விட்டார்கள். அதனால் இந்த வரலாறு விஜய்சேதுபதிக்கு தெரியாமல் வேறு ஊருக்கு சென்று வாழ்ந்து வருகிறார்கள்.

விஜய் சேதுபதி கிராமத்தில் பேருந்து நடத்துநரான பணிபுரிந்து வருகிறார். பேருந்து நடத்துநரான விஜய்சேதுபதி, அந்த பேருந்தில் பயணியாக வரும் மடோனா செபாஸ்டியனும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். அப்போது விஜய்சேதுபதியின் காதலியான மடோனாவின் பின்னால் ஒருவர் சுற்றி வந்து தொல்லை கொடுக்கிறார். அவரை விஜய்சேதுபதி கண்டிக்கிறார். இதனால் அந்த நபருக்கும் விஜய்சேதுபதிக்குமிடையே சண்டை வருகிறது. அந்த நபர் அடியாட்களுடன் வந்து விஜய்சேதுபதியை அடித்து விட்டு சென்று விடுகிறார்.

இதனால் அந்த நபரை பழிவாங்கும் நோக்கத்தோடு, யோகிபாபுவிடம் சென்று என்ன செய்யலாம் என்று கேட்கிறார். அதற்கு யோகிபாபு தனக்கு தெரிந்த அரசியல்வாதியிடம் சொல்லாம் என்று கூறி விஜய்சேதுபதியிடம் இருக்கும் சம்பளம் பணத்தை வாங்கி வந்து செலவு பண்ணிவிடுகிறார். விஜய்சேதுபதி இதனால் டென்ஷனாகி, தன்னை அடித்தவர்களை தேடிச் சென்று அடித்து துவைத்து விடுகிறார்.

இந்த விஷயம் விஜய்சேதுபதியின் அம்மா சரண்யாவிற்கு தெரிய வருகிறது. அப்பா, தாத்தாவைப் போல தன் மகன் டானாக மாறி விடக்கூடாது என்ற காரணத்திற்காக தான் தாங்கள் வேறு ஊரில் வாழ்ந்து வரும் கதையை சொல்லுகிறார். தன்னுடைய குடும்பம்
டான் என்பதை அறிந்த ஜுங்கா விஜய்சேதுபதி, தானும் ஒரு டானாக மாறி தன்னுடைய அப்பா இழந்த சினிமா தியேட்டரை மீட்க வேண்டும் என்று எண்ணுகிறார்.

டானாக மாற வேண்டும் என்பதற்காக சென்னை வரும் ஜுங்கா விஜய்சேதுபதி பணம் சம்பாதிப்பதற்காக சின்ன சின்ன கட்டப் பஞ்சாயத்துகளை செய்து வருகிறார். அப்போது அவரிடம் நிறைய கட்டப்பஞ்சாயத்துகள் வருகிறது. அப்படி கட்டப் பஞ்சாயத்து செய்து தனது அப்பா சம்பாதித்து இழந்த பாரடைஸ் தியேட்டரை மீட்க பணத்தை சேர்த்து வருகிறார்.

இவரது வளா்ச்சியை பிடிக்காத மற்றொரு டானா ராதா ரவி தியேட்டரை சுரேஷ் மேனனைிடம் கொடுத்து விடுகிறார். தியேட்டரை மீட்க சுரேஷ் மேனன் என்பவரிடம் போய் கேட்கும் அதை அவர் விற்கவில்லை என்று சொல்லி அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார். இதனால் கடுப்பான ஜுங்கா, அவரை பழிவாங்க பாரீஸில் உள்ள அவரது மகளை கடத்த முயற்சி செய்ய நினைக்கிறார். அதனால் பாரிஸ் செல்லும் ஜுங்கா, அவரது மகளான சாயிஷாவை சுற்றி எப்போதும் பாதுகாப்புக்கு ஆட்கள் இருக்க அவரை கடத்தலாம் என பிளான் போடுகிறார்.

இதனால் விஜய்சேதுபதியின் எண்ணம் நிறைவேறியதா? தியேட்டரை மீட்டரா? சாயிஷாவை கடத்தினாரா? அதுபோல தனது காதலி மடோனாவை திருமணம் செய்தாரா என்பது தான் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி.

கஞ்ச டானாகவும், பணக்கார டானாகவும் கலக்கியிருக்கிறார் விஜய்சேதுபதி.கஞ்சத்தனமாக நடக்கும் வஜய்சேதுபதியால் எப்படி அவதி படுகிறார்கள் அவரது அடியாட்கள் என்பதை பார்க்கும் போது தியேட்டரை சிரிப்பலையில் முழ்குகிறது. யோகி பாபு விஜய்சேதுபதி சேர்ந்து செய்யும் அலப்பறைகளால் தியேட்டரே குலுங்கிறது.

சாயிஷா முதல் படத்தில் நடனத்தில் அசத்தியிருப்பார். இந்த படத்திலும் தனது நடன அசைவுகளால் ரசிகர்களை மயக்கியிருக்கிறார். விஜய்சேதுபதியின் காதலியாக வரும் மடோனாவும் தன் பங்கை சிறப்பாக ஆற்றியிருக்கிறார். விஜய் சேதுபதியின் தாயாக வரும் சரண்யாவும் அவரது பாட்டியாக வரும் கதாபாத்திரங்களை செவ்வனே செய்திருக்கிறார்கள். திரையில் இவர்கள் அடிக்கும் லூட்டிகள் பார்பபோரை ரசிக்க வைத்திருக்கிறது.

பாடல்கள் சித்தார்த் விபின் இசையில் சுமார் ரகம். ஒளிப்பதிவு டூட்லி அமைத்திருக்கிறார். கோகுல் இயக்கத்தில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா படத்தை போல இதுவும் காமெடியில் அசத்தியிருக்கிறார்.

ஆக ஜுங்கா படம் பார்த்தும், சிரித்தும் மகிழலாம்.