ஜூங்கா படத்தை முன்னதாகவே வெளிநாடுகளில் ப்ரீமியர் ஷோ பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர். விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டின் , சாயிஷா உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் இப்படத்தை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கோகுல் இயக்கி இருக்கிறார்.

படம் பார்த்த வெளிநாடு வாழ் ரசிகர்கள் படம் வயிறு குலுங்க சிரிக்கும் வகையில் எடுக்கப்பட்டிருப்பதாக  டுவிட்டரில் பாராட்டி வருகிறார்கள்.

பொள்ளாச்சியில் சும்மா திரியும் பொள்ளாச்சி மக்களின் ஏளன பார்வையில் இருந்து நாமும் ஒரு பெரிய ஆளாக வரணும்னு டான் அவதாரம் எடுத்து பல டான்களின் போட்டியை சமாளிக்க விஜய் சேதுபதி செய்யும் காமெடி கலந்த சேட்டைகளே ஜூங்கா படத்தின் கதையாம்.

யோகிபாபு வரும் ஒவ்வொரு சீனும் அதிரடி பட்டாசாக சிரிக்க வைக்கிறதாம் மொத்தத்தில் ஜூங்கா சூப்பர் என்பதே முதல் கட்ட தகவல்.