சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய ‘காலா’ திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதே தேதியில் பிரபல ஹாலிவுட் திரைப்படமான ‘ஜூராஸிக் வேர்ல்ட்’ திரைப்படம் ரிலீஸ் செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

‘காலா’ ரிலீஸ் ஆகும் தேதியில் தமிழ்ப்படம் உள்பட எந்த பிரபல நடிகரின் படமும் அகில இந்திய அளவில் வெளியாகாது என்று கூறப்பட்ட நிலையில் திடீரென ‘ஜூராஸிக் வேர்ல்ட் ரிலீஸ் என்ற அறிவிப்பு காலா’ படக்குழுவினர்களை அதிரச்சி அடைய செய்துள்ளது.

ஜூராஸிக் பார்க் உள்பட இந்த படத்தின் அனைத்து பாகங்களையும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசித்த நிலையில் ஜூன் 7ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளதால் ‘காலா’ படத்திற்கு புக் ஆகும் தியேட்டர்கள் எண்ணிக்கை உலக அளவில் குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.