Home சற்றுமுன் ரேவதி, சில்க் ஸ்மிதா லிஸ்டில் சேர்ந்த ஜோதிகா

ரேவதி, சில்க் ஸ்மிதா லிஸ்டில் சேர்ந்த ஜோதிகா

சினிமாவில் பழைய படத்தின் தலைப்பை தற்போதைய படங்களுக்கு வைத்து வருவதை பேஷனாகி விட்டது. அது போல நடிகையின் பெயரில் அந்த நடிகை நடிக்கும் படத்தில் டைட்டில் வைப்பது என்பது அத்திபூத்தாற் போல நடைபெறும். அப்படியொரு அதிஷ்டம் அடித்துள்ளது பிரபல நடிகைக்கு. நாச்சியார் படத்தில் நடித்து அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து இப்படியொரு அதிஷ்டம் தான் ஜோதிக்கு கிடைத்துள்ளது. இப்படி இதற்கு முன்னாதாக சில்க் ஸ்மிதா மற்றும் ரேவதிக்கு பின்னா் அந்த வாய்ப்பு ஜோதிக்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே 1983 ஆம் ஆண்டு சில்க் நடித்த படம் ஒன்றுக்கு சில்க் சில்க் சில்க் என்றும் அதற்கு பின்னா் அந்த வாய்ப்பு ரேவதிக்கு கிடைத்தது. 1986 ல் அவா் நடித்த படம் ஒன்றுக்கு ரேவதி என்று தலைப்பு வைத்தார்கள்.

தற்போது இத்தனை வருடங்களுக்கு பிறகு அந்த அதிஷ்டத்தை ஜோதிகா பெற இருக்கிறார். அவா் நடிக்க இருக்கும் படத்திற்கு ஜோ என்று தலைப்பு வைக்க படக்குழு ஆலோசித்து வருகின்றனா். ஜோதிகா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தற்போது நடித்து வருகிறார். திருமணத்திற்கு பின் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமைந்து வருகிறது. திருமணத்திற்கு பின் 36 வயதினிலே படத்தில் நடித்தார். அடுத்து மகளிர் மட்டும் படத்தை தொடா்ந்து நாச்சியார் படத்தில் நடித்தார். அந்த படத்தில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருந்தார். அவரது நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனா்.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கி வரும் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் போஸ்டா் அண்மையில் வெளியாகியது. இதற்கிடையில் பாலிவுட் படம் ஒன்றில் ஜோதிகா நடிப்பதாக செய்திகள் வெளியாகின. வித்யாபாலன் நடிப்பில் வெளிவந்த ஹிந்தி படத்தின் ரீமேக்கில் ஜோதிகா ரேடியோ ஜாக்கியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த படத்திற்கு தான் ஜோதிகாவின் பெயரை டைட்டிலாக வைக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது. உங்களுடன் ஜோ என்ற தலைப்பை பரிசீலித்து வருகின்றனா். இந்த டைட்டில் கன்பர்ம் ஆனால் ரேவதி,சில்க் ஸ்மிதா இவா்களை தொடா்ந்து தனது பெயரிலேயே டைட்டில் அமைந்த நடிகையின் வரிசையில் இடம் பிடித்து விடுவார் ஜோதிகா.