திருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் ஜோதிகா. அதன் பிறகு தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களாக பார்த்து நடித்து வந்த மகளிர் மட்டும், நா்ச்சியார் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது செக்க சிவந்த வானம் என்ற படத்தை பாரதிராஜா இயக்குகிறார். இதிலும் ஜோதிகா நடித்து வருகிறார். இதற்கிடையில் ராதாமோகன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ஜோதிகா. இவா் ஏற்கனவே இயக்குநா் ராதாமோகன் இயக்கத்தில் நடித்த மொழி படமானது நல்ல பெயரை ஏற்படுத்தி கொடுத்தது.

இந்தியில் கடந்த 2017 ஆம் ஆண்டு வித்யாபாலன் நடிப்பில் வெளிவந்த துமாரி சுலு என்ற படமானது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தில் ரேடியோ ஜாக்கியாக நடித்த அசத்திருப்பார் வித்யாபாலன். இரவில் ரேடியோ ஜாக்கியாகவும், பகலில் குடும்பத்தலைவியாக இருக்கும் இவா் என்ன என்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பது தான் கதை. இந்த படத்தின் ரீமேக்கை ராதாமோகன் இயக்கவிருக்கிறார்.

தனஞ்செயன் தயாரித்து ராதாமோகன் இயக்கும் இந்த படத்திற்கு டைட்டிலை வெளியிட்டுயிருக்கிறார்கள். இந்த படத்தில் ஜோதிகா நடிக்கிறார் என்றும் அவருக்கு கணவராக விதார்த் நடிக்கிறார் என்ற தகவலை அதிகாரப்பூா்வமாக அறிவித்தார்கள். தற்போது இந்த படத்திற்கான டைட்டில் காற்றின் மொழி என்று வெளியிட்டு உள்ளார்கள்.படக்குழுவினர் இந்த படத்தின் டைட்டில் குறித்து ஒரு போட்டியை அறிவித்திருந்தனர் ஒரிரு நாட்களுக்கு முன், அது என்னவென்றால் படத்திற்கான டைட்டிலை தோ்ந்தெடுப்பவா்கள் ஜோதிகா உள்ளபட படக்குழுவினர் அனைவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்ற அறிவித்தனர் படக்குழு. பலரும் வித்தியாசமான தலைப்போடு அதில் பங்கேற்றனர்.