திருமணத்திற்கு பின்னர் ரிஎண்ட்ரி ஆன ஜோதிகா நடித்த படங்களான 36 வயதினிலே, மகளிர் மட்டும் மற்றும் நாச்சியார் ஆகிய மூன்று படங்களில் ரகுமான், மாதவன், மற்றும் டாக்டர் குருசங்கர் ஆகியோர் அவரது கணவர் கேரக்டரில் நடித்தனர்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் ஜோதிகா நடிக்கவுள்ள 4வது படமான ‘துமாரி சூளு’ என்ற இந்தி படத்தின் ரீமேக்கில் அவரது கணவராக நடிக்க வித்யார்த் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ‘மைனா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே ஜோதிகா நடித்த மொழி படத்தை இயக்கிய இயக்குனர் ராதாமோகன் இயக்கும் இந்த படத்தை தனஞ்செயன் தயாரிக்கவுள்ளார். கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் முடிந்த பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தில் லட்சுமி மஞ்சு ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனார்.