நடிகை ஜோதிகா ’36 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழ்
சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்தார். இப்படம்
மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து
‘மகளிர் மட்டும் 2’ ‘ நாச்சியார்’ உள்ளிட்ட படங்களில்
நடித்திருந்தார்.

இதையடுத்து, ’60 வயது மாநிறம்’ படத்தை இயக்கிய ராதா
மோகன் இயக்கத்தில் தற்போது ஜோதிகா நடித்துள்ள படம்
‘காற்றின் மொழி’.

பெண்களை மையப்படுத்தி தயாராகும் இத்திரைப்படத்தில்
ஜோதிகா ‘விஜயலட்சுமி’ என்ற கதாபாத்திரத்தில்
நடித்துள்ளார். ஆர்.ஹெச் காசிப் இப்படத்திற்கு
இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகி
உள்ளது.