Home சற்றுமுன் கே.எஸ் ரவிக்குமாரிடம் குட்டு வாங்கிய மிஷ்கின்

கே.எஸ் ரவிக்குமாரிடம் குட்டு வாங்கிய மிஷ்கின்

பேரன்பு படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் பேசிய மிஷ்கின் பேரன்பு ஒரு சிறந்த படம் என்றும் தயாரிப்பாளர் தேனப்பனை பார்த்து தேனப்பன் சார் நீங்க இதுக்கு முன்னால தயாரித்ததெல்லாம் படமல்ல இருட்டு அறையில் முரட்டுக்குத்துக்கு சமம் என்றார்.

இதை மேடையில் உட்கார்ந்து கொண்டிருந்து கேட்டுக்கொண்டிருந்த ரவிக்குமாருக்கு பகீர் என்றிருந்தது ஏனென்றால் ரவிக்குமார் தேனப்பன் தயாரிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வந்த பஞ்சதந்திரம் படத்தை இயக்கியவர்.

அடுத்து பேசிய ரவிக்குமார் மிஷ்கின் இப்படியெல்லாம் பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது என்னுடைய பஞ்சதந்திரம் படம் இன்று வரை அனைவரும் பார்க்கும் படமாக இருக்கிறது எல்லோர் வீட்டிலும் அதன் டிவிடி உள்ளது என்றார்.

இதை கேட்ட மிஷ்கின் நெளிந்தார்.