அயன், மாற்றான் திரைப்படத்திற்குப் பிறகு கே வி ஆனந்த் இயக்கும் திரைப்படத்தில் சூரியா நடித்து வரும் நிலையில் அதில் மோகன்லால், மோமன் இராணி உள்ளிட்டோரும் உள்ளனர்.

அது மட்டும் இல்லாமல் சூர்யாவின் 37 வது திரைப்படத்திற்கு ஆர்யா தான் வில்லன் என்று கூறப்படும் நிலையில் அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் சூர்யா 4 கெட்டபுகளில் தனது நடிப்பினை வெளிப்படுத்த உள்ளதாகவும், தற்போது படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருவதாகவும் சினி ரிப்போர்ட்டர்ஸ்க்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.