காலா படத்தின் பாடல்களை அந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் இணையதளத்தில் வெளியிட்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காலா. இந்த படமானது தயாரிப்பாளர் சங்கத்தின் போராட்டத்தால் திரைக்கு வர காலதாமதம் ஆகி வந்தது. இந்நிலையில் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு ஒவ்வொரு படங்களாக வெளி வர தொடங்கியுள்ள நிலையில் மே 7ஆம் தேதி காலா படத்தின் பாடல்களை இணையதளத்தில் வெளியிட போவதாக நடிகர் தனுஷ் அறிவித்திருந்தார். அதுபோல காலா படம் ஜூன் மாதம் 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தை லைகா நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் தனது ட்விட்டர் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் காலா படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று மாலை சென்னை நந்தனம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த படத்தில் ரஜினி, ஈஸ்வரி ராவ், நானா படேகர், சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால், அஞ்சலி பட்டேல் உள்ளபட பலரும் நடித்துள்ளனா். படத்தின் இசையை சந்தோஷ் நாராயணன் அமைத்துள்ளார். இன்று பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொள்ள இருக்கின்றனர். அரசியல் கட்சி சார்ந்தவர்கள் இந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இன்று பிரம்மாண்டமாக நடைபெறும் விழாவை இணையதளம் மூலமாக கொடுக்க இருக்கிறார் தனுஷ். ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் விழாவில் சந்தோஷ் நாராயணன் இசைக்குழு லைவ்வாக இசையமைத்து பாட உள்ளார்கள். ஒவ்வொரு பாடலும் நன்றாக அமைந்துள்ளது. ரஜினி ரசிகா்கள் எதிர்பார்த்தை பூர்த்தி செய்துள்ளது.