சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்னர் காலா திரைப்படம் வெளியானது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் வசூலில் படுத்தே விட்டது.

படம் வெளியாகும் சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றார் ரஜினி. அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், சில சமூகவிரோதிகள் போராட்டத்துக்குள் புகுந்ததாகவும், அந்த சமூக விரோதிகள் இந்த இந்த கலவரத்துக்கு காரணம் எனவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க பாஸ்-  ரஜினியை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்

ரஜினியின் இந்த கருத்து பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் அடுத்த ஓரிரு நாட்களில் வெளியான காலா திரைப்படத்தை பெருவாரியான மக்கள் புறக்கணித்தனர். இதனால் படத்தில் முதல் முதலே தியேட்டர்களில் கூட்டமே இல்லை. வார இறுதி நாட்களில் கூட முன்பதிவுகள் அனைத்தும் காலியாகவே இல்லை.

இதையும் படிங்க பாஸ்-  இதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'காலா' செகண்ட்லுக்

காலா வெளியாகி நேற்றுடன் இரண்டு வாரங்கள் ஆகிறது. ஆனால் தமிழ்நாடு முழுவதும் 80 சதவீத தியேட்டர்களில் காலா திரைப்படம் தூக்கப்பட்டு டிராஃபிக் ராமசாமி, டிக் டிக் டிக், ஆந்திரா மெஸ் ஆகிய படங்கள் இன்று திரையிடப்படுகிறது.